< Back
தேசிய செய்திகள்
அசாம்; சாலை விபத்தில் 7 பேர் பலி...!! 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
தேசிய செய்திகள்

அசாம்; சாலை விபத்தில் 7 பேர் பலி...!! 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

தினத்தந்தி
|
6 Sept 2023 12:29 PM IST

நேற்று (செவ்வாய்கிழமை) இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திஸ்புர்,

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தின் தும்டுமாவில் உள்ள சந்தையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10-க்கும் மேற்பட்டோர் ஒரே வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அந்த நேரத்தில், சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று தீடிரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் பயணித்த வாகனத்தின் மீது மோதியது.

இதில் வாகனத்தில் பயணித்த அனைவரும் விபத்தில் சிக்கி அலறினர். இதனைகண்ட மற்ற வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை எற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்