அசாம்: 40 ஆண்டு கால காங்கிரஸ் மூத்த தலைவர் தகன மைதான அலுவலகத்தில் தற்கொலை
|அசாமில் 40 ஆண்டு கால காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தகன மைதான அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள தகன மைதான அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ராஜூ பிரசாத் சர்மா (வயது 65) என்பவரின் உடலை போலீசார் இன்று கைப்பற்றி உள்ளனர்.
அந்த பகுதியில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதில், தற்கொலைக்கு யாரும் பொறுப்பில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது என போலீசார் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பல்வேறு சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்து உள்ளார். ஆழ்ந்த மதப்பற்றாளர் என கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.
கட்சி தலைமையகத்திற்கு, பிரேத பரிசோதனைக்கு பின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபென் போரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
அவரது விருப்பம் நிறைவேறும் வகையில், அவருடைய உடலை கவுகாத்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.