அசாம்: பள்ளி சென்ற 2 மாணவிகளை வனப்பகுதிக்கு கடத்தி கொடூர பலாத்காரம்
|அசாமில் பள்ளி சென்ற 2 மாணவிகளை காட்டு பகுதிக்கு கடத்தி சென்ற 2 பேர் கொடூர முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததில் ஒரு மாணவி உயிரிழந்து உள்ளார்.
ஹைலகண்டி,
அசாமின் ஹைலகண்டி மாவட்டத்தில் பர்னீ பிரீஸ் தேயிலை தோட்ட பகுதியில் வசித்து வரும் மைனர் சிறுமிகள் 2 பேர் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை அவர்கள் பள்ளி கூடத்திற்கு சென்றபோது, அவர்களை 2 பேர் பின்தொடர்ந்து சென்று உள்ளனர்.
இதன்பின்பு, அவர்களை திடீரென 2 பேரும் கடத்தி, காட்டு பகுதிக்கு தூக்கி சென்று உள்ளனர். மோகனப்பூர் பகுதியில் உள்ள அடர்வன பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட 2 சிறுமிகளும் கொடூர முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில், பள்ளி முடிந்து அவர்கள் வீடு திரும்பி வராத நிலையில், அந்த சிறுமிகளில் ஒருவரின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். இதில் காட்டுக்குள் 2 மைனர் சிறுமிகளும் தீவிர சிகிச்சை பெற கூடிய நிலையில் கிடந்து உள்ளனர்.
அவர்களை மீட்டு சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். எனினும், அவர்களில் ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த புதன் கிழமை உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.