< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் 170 கிராம் ஹெராயின் பறிமுதல் - ஒருவர் கைது
|29 Sept 2022 2:55 PM IST
அசாம் மாநிலம் நாகோனில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகோன்,
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் நேற்று இரவு 170 கிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ரஷான் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாவட்ட போலீசாரின் குழு, ரகசிய தகவலின் அடிப்படையில், நோட்டம் பானிகான் பகுதியில் உள்ள ரஷான் அலியின் வீட்டில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் மூன்று சோப்பு டப்பாக்களில் 40 கிராம் ஹெராயின் மற்றும் 96 பிளாஸ்டிக் குப்பிகளில் 137.77 கிராம் எடையுள்ள ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ரஷான் அலி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.