< Back
தேசிய செய்திகள்
சாலையில் நடந்து சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

சாலையில் நடந்து சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
9 Jan 2024 5:01 PM IST

மரத்தில் இருந்த தேன் கூடுகளை பறவைகள் சேதப்படுத்தி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

திஸ்பூர்,

அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் உள்ள சர்க்யூர் ஹவுஸ் சாலை வழியாக சென்ற நபர்களை நூற்றுக்கணக்கான தேனீக்கள் ஒரே நேரத்தில் கொட்டியுள்ளன. இதில் 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, மோரிகான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தீபக் நந்தி என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி சர்க்யூட் ஹவுஸ் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்குள்ள ஒரு மரத்தில் இருந்த 3 தேன் கூடுகளை பறவைகள் சேதப்படுத்தி இருக்கலாம் எனவும், இதனால் தேனீக்கள் கூட்டமாக வந்து சாலையில் சென்ற நபர்களை கொட்டத் தொடங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்