< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சர்வதேச விமான கண்காட்சி; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
|12 Feb 2023 8:16 PM IST
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இதில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். காலை 9.30 மணியில் இருந்து காலை 11.30 மணிவரை விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளது. அதனை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகளிக்க உள்ளார். பின்னர் காலை 11.45 மணியளவில் எலங்காவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு செல்ல உள்ளார்.