< Back
தேசிய செய்திகள்
கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
தேசிய செய்திகள்

கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

தினத்தந்தி
|
15 March 2023 2:59 AM IST

கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

விஜய சங்கல்ப யாத்திரை

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் நேற்று பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நடந்தது. கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சர்க்களிலில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் ஆட்டோக்கள், கார்கள் மட்டும் இன்றி இருசக்கர வாகனங்களின் பேரணியும் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பெண்கள் கும்பங்களை சுமந்தபடி யாத்திரையில் பங்கேற்றனர். 4 பொக்லைன் வாகனங்களில் மலர் தூவி யாத்திரை வரவேற்கப்பட்டது. யாத்திரையில் தேர்தலில் டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் சுரேஷ் நாராயண், ஒய் சம்பங்கி, மோகன் கிருஷ்ணா, சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் மந்திரி அஸ்வத் நாராயணும் கலந்துகொண்டார்.

6 தொகுதிகளில் வெற்றி உறுதி

சுராஜ்மல் சர்க்கிளில் இருந்து காந்தி சர்க்கிள், பிரிட்சர்டு சாலை மார்க்கமாக தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு விஜய சங்கல்ப யாத்திரை சென்றது. வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து யாத்திரையில் பங்கேற்றனர். யாத்திரையின்போது மந்திரி அஸ்வத் நாராயண் பேசியதாவது:-

கோலார் தங்கவயலில் மட்டும் இன்றி வரும் சட்டசபை தேர்தலில் கோலார் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. கோலார் சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தோல்வி அடைவது உறுதி. கோலார் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் மாவட்டத்திலும் கட்சிக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்