< Back
தேசிய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பெங்களூருவில் இறைச்சி விற்பனைக்கு தடை- ஓவைசி கண்டனம்

Image Courtesy: PTI

தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பெங்களூருவில் இறைச்சி விற்பனைக்கு தடை- ஓவைசி கண்டனம்

தினத்தந்தி
|
29 Aug 2022 2:51 PM GMT

விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுவதால் பெங்களூருவில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாகப் பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.

அதாவது ஆகஸ்ட் 31 அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் பெங்களூரில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி விநாயகர் சதுர்த்திக்காக இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ள கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், "இது பணக்காரர்களுக்கான அரசு. இது [பெங்களூரு இறைச்சி தடை] தொழில், வாழ்வாதாரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமைக்கு எதிரானது" என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்