< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள மாநில தலைமைச் செயலாளராக மனோஜ் பந்த் நியமனம்
|31 Aug 2024 9:59 PM IST
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக மனோஜ் பந்த் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக மூத்த அதிகாரி மனோஜ் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1991-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான மனோஜ் பந்த், இன்று ஓய்வு பெறும் பகவதி பிரசாத் கோபாலிகாவுக்கு பிறகு பதவியேற்கிறார். முன்னதாக 1989-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபாலிகா இன்று ஓய்வு பெறவிருந்தார், ஆனால் அவருக்கு மூன்று மாதங்கள் நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழித் துறை பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பந்த் தலைமைச் செயலாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மனோஜ் பந்த் நிதித்துறை செயலாளராக இருந்தார். தற்போது மனோஜ் பந்த் வகித்த நிதித்துறை செயலர் பதவிக்கு பிரபாத் குமார் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.