< Back
தேசிய செய்திகள்
கல்வி மாநில பட்டியலில் உள்ளதால்மத்திய அரசால் கல்வி கொள்கையை இயற்ற முடியாது
தேசிய செய்திகள்

கல்வி மாநில பட்டியலில் உள்ளதால்மத்திய அரசால் கல்வி கொள்கையை இயற்ற முடியாது

தினத்தந்தி
|
22 Aug 2023 12:15 AM IST

கல்வி மாநில பட்டியலில் உள்ளதால் மத்திய அரசால் கல்வி கொள்கையை இயற்ற முடியாது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு :-

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள், உயர் அதிகாரிகள், துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

கல்வி மாநில பட்டியலில் உள்ளது. அதனால் மத்திய அரசின் கல்வி கொள்கையை நிராகரிக்கிறோம். ஏற்கனவே இருந்த கல்வி கொள்கை தொடர்ந்து அமல்படுத்தப்படும். மத்திய அரசால் கல்வி கொள்கையை இயற்ற முடியாது.

ஏனெனில் கல்வி மாநில பட்டியலில் உள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கலாசாரங்கள்

கல்வி கொள்கையை திணிக்க முயற்சி செய்வது ஒரு சதி. பல்வேறு கலாசாரங்களை கொண்ட நமது நாட்டில் ஒரே மாதிரியான கல்வி கொள்கையை செயல்படுத்த முடியாது. மேலும் புதிய கல்வி கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்.

பா.ஜனதா ஆட்சியில் உள்ள பிற மாநிலங்கள் மத்திய அரசின் கொள்கையை அமல்படுத்த தயங்குகிறது. கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தேசிய கல்வி கொள்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் கல்வி கொள்கையை அமல்படுத்த பள்ளி-கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்