< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பாஜக பேரம் பேசியது: அரவிந்த் கெஜ்ரிவால்
|5 Nov 2022 3:10 PM IST
குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.
ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுங்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியதாக என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். போட்டியிடாமல் ஒதுங்கினால் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் கூறினார்.
எனினும், தன்னிடம் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளியிட மறுத்த கெஜ்ரிவால், பாஜக நேரடியாக இதுபோன்று அணுகாது எனவும் விளக்கம் அளித்தார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கெஜ்ரிவால் இவ்வாறு பேசினார்.