< Back
தேசிய செய்திகள்
கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
29 Jun 2024 7:55 PM IST

அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கெஜ்ரிவாலை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து அவரது காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், கெஜ்ரிவாலை 14 நாட்கள்(ஜூலை 12-ந்தேதி வரை) நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்