< Back
தேசிய செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு; சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு; சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
15 July 2024 2:26 AM GMT

பா.ஜனதா அரசு சதி செய்து போலி வழக்கில் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிறையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் உடல் எடை குறைந்து வந்தார். அவருக்கு ஜாமீனும் கிடைக்காமல் இருந்து வருகிறது.இந்த நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமான நிலையை எட்டியிருப்பதாக அவரது கட்சி சார்பில் கூறப்பட்டு உள்ளது. நேற்று ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் பேசிய மந்திரி அதிஷி கூறியதாவது:-

"கெஜ்ரிவால் நீரிழிவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது சர்க்கரை அளவு மோசமான அளவு குறைந்துள்ளது. பா.ஜனதா அரசு சதிசெய்து போலி வழக்கில் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது. அங்கு அவரது உடல்நலம் கவனிக்கப்படாமல் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. அவரது உடல்எடை 8.5 கிலோ குறைந்தது.

அவரது சர்க்கரை அளவு 50-க்கும் கீழ் பலமுறை சென்றுள்ளது. இது கவலைக்குரியதாகும். இதற்கு சிறையில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அவர் பக்கவாதம் அல்லது மூளையில் ரத்தக்கசிவு போன்ற கொடிய தாக்குதலுக்கு ஆளாகலாம். இதுதொடர்பாக நாங்கள் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்