< Back
தேசிய செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

தினத்தந்தி
|
22 Feb 2024 11:45 AM IST

தனக்கு அனுப்பும் சம்மன் சட்டவிரோதமானது என முதல்-மந்திரி அரவிந்த் ஜெரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. எனவே கடந்த 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் திரும்பத் திரும்பச் சம்மன் அனுப்புவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது 7-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 26-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்