< Back
தேசிய செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு - சிபிஐ பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு - சிபிஐ பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
5 July 2024 12:49 PM IST

வழக்கு விசாரணையை 17-ம் தேதிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் முடிவடைந்து கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து ஜாமீன் கோரியும், வழக்கை அவசர வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில்,அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.மேலும் வழக்கு விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்