< Back
தேசிய செய்திகள்
அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்

தினத்தந்தி
|
9 March 2024 5:05 PM IST

அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியான நபாம் துகி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இட்டாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நபாம் துகி ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு நபாம் துகி அனுப்பி வைத்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியான நபாம் துகி, தற்போது சகாலி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்ற கட்சிகளுக்கு மாறுவதை தடுக்க முடியாததால் தார்மீக அடிப்படையில் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை நபாம் துகி ராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கியாமர் தனா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்