ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறுவோம்: மெகபூபா முப்தி நம்பிக்கை
|ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது என்பதால் மக்களை முட்டாளாக்க விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது என்று எனக்கு நன்கு தெரியும் இந்த விவகாரத்தில் பொய் கூறி மக்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் குலாம் நபி ஆசாத் இன்னும் 10 நாட்களில் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், குலாம் நபி ஆசாத்தின் கருத்து பற்றி ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான மெகபூபா முப்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து எனவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற முடியும் என இங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்றும் தெரிவித்தார்.