< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி வழங்க வாய்ப்பே இல்லை: அமித்ஷா
|6 Sept 2024 6:51 PM IST
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று அமித்ஷா கூறினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா இந்த அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது. அது மீண்டும் திரும்பாது. அதனை நடக்க விட மாட்டோம். இச்சட்டம் இளைஞர்களின் கைகளில் ஆயுதத்தையும் மற்றும் கற்களையும் கொடுத்தது.
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டு தோறும், குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் இரண்டு சிலிண்டர் வழங்கப்படும்.மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், குஜ்ஜார்களுக்கான இட ஒதுக்கீட்டில் கையை வைக்க அனுமதிக்க மாட்டோம்" என்றார். '