பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது
|உப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் ஒடிசா மாநிலத்ைத சேர்ந்த பிரமாம்சன் (வயது48) என்பவர் சமையல் வேலை செய்து வந்தார். இதற்காக அவர் அப்பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். பிரமாம்சன் வீட்டின் அருகே மளிகை கடை உள்ளது. இந்தநிலையில் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பள்ளி மாணவிகளுக்கு அவர் சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பள்ளி மாணவிகளை பிரமாம்சன் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தனது நண்பர்களுக்கு அவர் அனுப்பி உள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் மளிகை கடைக்கு பள்ளி மாணவி வந்தாள். அவளுக்கு பிரமாம்சன் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பேசி கொண்டிருந்தார். அப்போது மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டாள். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அப்போது, பிரமாம்சன் தப்பியோடினார். அவரை ெபாதுமக்கள் துரத்தி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் பிரமாம்சனை பொதுமக்கள் பழைய உப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரமாம்சனை கைது செய்தனர்.
பின்னர், அவரை போலீசார் உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.