< Back
தேசிய செய்திகள்
விமானியாக நடித்து 30 பெண்களை ஏமாற்றியவர் கைது
தேசிய செய்திகள்

விமானியாக நடித்து 30 பெண்களை ஏமாற்றியவர் கைது

தினத்தந்தி
|
4 Aug 2022 3:25 AM IST

டெல்லியின் செக்டார் 43 பகுதியில் ஹேமந்த் சர்மா என்ற 25 வயது இளைஞர் வசித்து வந்தார்.

குருகிராம்,

டெல்லியின் செக்டார் 43 பகுதியில் ஹேமந்த் சர்மா என்ற 25 வயது இளைஞர் வசித்து வந்தார். அவர் மீது ஒரு பெண் போலீசில் புகார் அளித்திருந்தார். 'இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் நண்பராக அறிமுகமான ஒரு நபர், தன்னை விமானி (பைலட்) என்று கூறிக்கொண்டு பழகி ரூ.1 லட்சத்துக்கு மேல் ஏமாற்றி வாங்கிக் கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஹேமந்த் சர்மா, இன்ஸ்டாகிராம் போலி கணக்கு மூலம், 30க்கும் மேற்பட்ட பெண்களிடம், தன்னை விமானி என்றுகூறி, விமானத்தில் பணிப்பெண் வேலைவாங்கித் தருவதாக பணம் வசூலித்து உள்ளார். அப்படி பணம் அனுப்பிய பின்பு அவர்களின் தொடர்பை துண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவரை கைது செய்த போலீசார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்