< Back
தேசிய செய்திகள்
ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரம்; பள்ளி கல்வி இயக்குனர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
தேசிய செய்திகள்

ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரம்; பள்ளி கல்வி இயக்குனர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
28 Sept 2022 12:15 AM IST

ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் உள்பட 5 பேரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

ஆசிரியர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் உள்பட 5 பேரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

12 ஆசிரியர்கள்

கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் 2-ம் நிலை உதவி ஆசிரியர்கள் (2012-13) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (2014-15) பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விதான சவுதா போலீசார் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 22 பேரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 12 பேரும் அடங்குவர். இந்த நிலையில் சி.ஐ.டி. போலீசாரால் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அக்டோபர் 1-ந் தேதி...

விசாரணையில் அவர்கள் கீதா, மாடே கவுடா, பசவராஜூ, ரத்னய்யா, சிவக்குமார் ஆகியோர் என்பதும், இதில் கீதா மற்றும் சிவக்குமார் ஆகியோர் பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் என்பதும் தெரியவந்தது. இதுவரை இவ்வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் 5 பேரையும் வருகிற 1-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்