< Back
தேசிய செய்திகள்
சிறுமியை மதுகுடிக்க வைத்த 7 பேர் மீது வழக்கு
தேசிய செய்திகள்

சிறுமியை மதுகுடிக்க வைத்த 7 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
28 Sept 2022 12:15 AM IST

சிறுமியை மதுகுடிக்க வைத்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:


பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்த 45 வயது நபர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார். இவர் மனைவி மற்றும் 15 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ வீரர் மனைவியை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராணுவ வீரரின் மனைவி தனது மகளான 15 வயது சிறுமியை மதுகுடிக்க கட்டாயப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ராணுவ வீரர் கொத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் ராணுவ வீரரின் மனைவி உள்பட 7 பேர் மீது கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்