< Back
தேசிய செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
4 Aug 2022 9:08 PM GMT

நஞ்சன்கூடு டவுனில், அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

மைசூரு:

நஞ்சன்கூடு டவுனில், அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

ஆசிரியை கொலை

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு டவுனில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இந்தி ஆசிரியையாக சுலோச்சனா என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆசிரியை சுலோச்சனா மட்டும் அப்பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஆசிரியை சுலோச்சனா மர்மமான முறையில் இறந்து பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நஞ்சன்கூடு டவுன் போலீசார் விரைந்து வந்து சுலோச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுலோச்சனா, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் சுலோச்சனாவின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் நஞ்சன்கூடு டவுன் 5-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் காயத்ரி, அவரது உறவினர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர்கள், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஆசிரியை சுலோச்சனாைவ கொன்றதை ஒப்புக்கொண்டனர்.

கணவருடன் கள்ளத்தொடர்பு

இதையடுத்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கொலையான ஆசிரியை சுலோச்சனாவுக்கும், கவுன்சிலர் காயத்ரியின் கணவர் முருகேசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை நாளடைவில் அறிந்த காயத்ரி, கணவர் மற்றும் சுலோச்சனாவை கண்டித்துள்ளார்.

ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி, தனது உறவினர்களான பாக்யா, நாகம்மா மற்றும் குமார் ஆகியோருடன் சேர்ந்து சுேலாச்சனாவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று 4 பேரும் சேர்ந்து சுலோச்சனாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. கைதான கவுன்சிலர் காயத்ரி உள்பட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்