< Back
தேசிய செய்திகள்
வீடு புகுந்து பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது
தேசிய செய்திகள்

வீடு புகுந்து பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கைது

தினத்தந்தி
|
2 Aug 2022 2:53 AM IST

ஆண்டர்சன்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

ஆண்டர்சன்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பூ வியாபாரி

கோலார் மாவட்டம் ஆண்டர்சன்பேட்டை பச்சப்பா தெருவை சேர்ந்தவர் சேகர். பூ வியாபாரி. இவரது மனைவி சுலோச்சனா(வயது 57). இந்த நிலையில் சுலோச்சனா கடந்த மாதம் 15-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது மர்மநபர்கள் சிலர் அவரது வீட்டில் புகுந்து அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். பின்னர் சுலேச்சனா அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சேகர் ஆண்டர்சன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுலோச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மா்மநபர்களை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

கைது

இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சுவர்ணகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், ரவிகிரண், ஆகாஷ் மற்றும் சஞ்சய் ஆகியோர் ஆவர். இதில் ஆகாஷ் என்பவர் சுலோச்சனா பூக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கைதானவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்