< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
|12 July 2023 12:51 AM IST
உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
கோரக்பூர்,
உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் பிரதமர் நரேந்திர மோடியையும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கொலை செய்யப்பவோதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதை தொடர்ந்து அந்ந நபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு அவரது இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் தொலைபேசியில் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த சஞ்சய் குமார் என்ற நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சஞ்சய் குமார் போலீஸ் கட்டுப் பாட்டு அறையை தொடர்பு கொண்டபோது அதீத மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.