< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்; 4 வீரர்கள் காயம்
|18 Sept 2024 12:12 AM IST
காஷ்மீரில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பயணம் செய்து காயம் அடைந்த 4 வீரர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
ரஜோரி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் மஞ்சகோட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று வீரர்களை சுமந்து கொண்டு சென்றது. அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது.
இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மஞ்சகோட் பகுதியில் உள்ள தொடக்க சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்பின்னர் அவர்கள் அனைவரும் உயர் சிகிச்சைக்காக ரஜோரியில் உள்ள ஆயுத படைகளுக்கான அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.