ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது
|உத்தரப் பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த ராணுவ வீரர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ,
ராணுவ அதிகாரிகள் போல நடித்து, ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி வேலை தேடுபவர்களை ஏமாற்றிய இந்திய ராணுவ வீரர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை மற்றும் ராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கூட்டு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காஜிபூர் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் அமித் குமார் சிங், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஷுபம் படேல், பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த ராம்பரன் சிங் மற்றும் நாகாலாந்தில் பணிபுரியும் எட்டாவாவைச் சேர்ந்த ராணுவ வீரர், தினேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லெப்டினன்ட் கர்னலின் பேட்ஜ், வேலை தேடுபவர்களின் பல ஆவணங்கள், இரண்டு ஏடிஎம் கார்டுகள், ஆறு மொபைல் போன்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.