சிக்கிமில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
|சிக்கிமில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டுள்ளது.
பாக்யோங்,
சிக்கிமில் உள்ள குபுப் மற்றும் நாதாங்கில் மோசமான வானிலை காரணமாக சிக்கித் தவித்த 70-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் நேற்று மீட்டதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 20 அன்று சிக்கிமில் உள்ள குபுப் மற்றும் நாதாங்கில் சீரற்ற வானிலை காரணமாக சிக்கித் தவித்த முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை திரிசக்தி கார்ப்ஸ் மீட்டது. அவர்களுக்கு தங்குமிடம், சூடான ஆடைகள், மருத்துவ உதவி மற்றும் சூடான உணவு வழங்கப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கையை ராணுவம் "ஆபரேஷன் ஹிம்ரஹத்" என்று அழைத்தது.
மற்றொரு மீட்பு நடவடிக்கையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் வெள்ளிக்கிழமை குப்வாரா மாவட்டத்தின் கீழ் கர்னாவில் உள்ள சாதனா டாப்பில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 60 வாகனங்களை மீட்டனர்.
வியாழக்கிழமை மாலை எஸ்ஹோ கர்னா இன்ஸ்பெக்டர் முதாசிர் அகமது தலைமையில் போலீசார் மீட்பு பணியை தொடங்கினர். பனிச்சரிவு எச்சரிக்கைக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து காப்பாற்ற வந்த போலீசாரை அனைவரும் பாராட்டினர்.
சாதனா கணவாய், குப்வாரா மாவட்டத்தின் கர்னா தாலுகாவை ஜம்மு மற்றும் காஷ்மீரின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் மலைப்பாதையாகும். இது பரந்த ஷம்ஸ் பிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது.