< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டை - பதுக்கி வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு
|16 Dec 2023 6:38 AM IST
ரஜோரி மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி என்ற பகுதியில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, தாரா பீர் மகல் என்ற பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையெறி குண்டுகள், ஐ.இ.டி. எனப்படும் நவீன கருவிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.