< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் காவல் நிலையத்தில் நுழைந்து துணை ராணுவ வீரர்கள் தாக்குதல் - 5 போலீசார் காயம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

காஷ்மீரில் காவல் நிலையத்தில் நுழைந்து துணை ராணுவ வீரர்கள் தாக்குதல் - 5 போலீசார் காயம்

தினத்தந்தி
|
30 May 2024 5:59 AM IST

காஷ்மீரில் காவல் நிலையத்தில் நுழைந்து துணை ராணுவ வீரர்கள் தாக்குயதில் 5 போலீசார் காயமடைந்தனர்

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக பாட்டாபோரா பகுதியில் உள்ள ஒரு துணை ராணுவ வீரரின் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

போலீசார் சோதனை நடத்தி சென்ற பின்பு நேற்று முன்தினம் இரவில், சில துணை ராணுவ வீரர்கள் கொண்ட குழு, காவல் நிலையம் சென்றுள்ளனர். வாக்குவாதம் செய்து அங்கிருந்த போலீசாரை தாக்கி உள்ளனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். அவர்களில் 4 போலீசார் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஒரு போலீஸ்காரரை, ராணுவ வீரர்கள் அழைத்து சென்றுவிட்டு, சில மணி நேரங்கள் கழித்து விடுவித்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து ராணுவம் மற்றும் போலீஸ் தரப்பில் இருந்து எந்தவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்