< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாயம்
|12 Jun 2022 1:59 AM IST
அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரகாஷ் சிங் ராணா 13 நாட்களாக காணவில்லை.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனை சேர்ந்த ராணுவ வீரரான பிரகாஷ் சிங் ராணா, அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீனா எல்லையில் உள்ள தக்லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் பிரகாஷ் சிங் ராணாவை காணவில்லை என தெரிகிறது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து அவரது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். ராணுவ வீரரை 13 நாட்களாக காணவில்லை என்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.