< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
4 நாள் பயணமாக ராணுவ தளபதி அமெரிக்கா சென்றார்
|13 Feb 2024 12:15 AM IST
அமெரிக்க பயணத்தின் போது மனோஜ் பாண்டே பென்டகனுக்கும் செல்ல இருக்கிறார்.
புதுடெல்லி,
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
குறிப்பாக அமெரிக்க ராணுவ தளபதி ரண்டி ஜார்ஜ் மற்றும் பிற மூத்த ராணுவ தளபதிகளை சந்தித்து அவர் பேசுகிறார். இதில் இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இந்த பயணத்தின்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கும் மனோஜ் பாண்டே செல்கிறார்.