< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பூடான் பயணம்
|29 July 2022 3:05 PM IST
இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பூடானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே இரண்டு நாள் பயணமாக பூடானுக்கு சென்று உள்ளார். அங்கு பூடான் நாட்டின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கு இடையே வரலாற்று உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தியா மற்றும் பூடான் இடையே அதிகமான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த பயணம் அமையும். என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பூடான் மன்னர் மற்றும் இராணுவ உயர்அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக இந்திய இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.