< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீர் எல்லையில் சுதந்திர தினம்: பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கினர்
|16 Aug 2023 12:29 AM IST
காஷ்மீர் எல்லையில் சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பு வழங்கினர்.
ஜம்மு,
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம், நேற்று காஷ்மீர் எல்லையிலும் ராணுவ வீரர்களால் கொண்டாடப்பட்டது. சம்பா, கதுவா, ஆர்.எஸ்.புரம், அங்கூர் போன்ற இடங்களில் உள்ள இருநாட்டு எல்லைகளில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
'இத்தகைய செயல்கள் இரு எல்லைக் காவல் படைகளுக்கும் இடையே அமைதியான சூழ்நிலையையும், எல்லையில் சுமுகமான உறவையும் உருவாக்க உதவுகின்றன' என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.