ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்,ஏட்டு உடல் நலக்குறைவால் சாவு
|பெலகாவியில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்,ஏட்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.
பெலகாவி:
பெலகாவி ஆயுதப்படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் ஆர்.தாசில்தார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பெலகாவியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபோல் பெலகாவி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த ஏட்டு துண்டப்பா மகதும்மா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பெலகாவி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டரும், ஏட்டும் ஒரே நாளில் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் மறைவுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் பட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார்.