< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அரியானா: குருகிராமில் பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!
|16 Oct 2022 10:41 PM IST
அரியானாவில் பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
குருகிராம்,
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் பட்டாசு வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
வீட்டில் கடந்த புதன்கிழமை நடந்த வெடிவிபத்தில் பகவான் தாஸ் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
90 சதவீத தீக்காயங்களுடன் 40 வயதான பகவான் தாஸ் வெள்ளிக்கிழமை இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் இறந்தார், அதே நேரத்தில் அவரது மகன் மனீஷ் மற்றும் மகள் சாவி ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பகவான் தாஸ், திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்காக, பட்டாசுகளை சப்ளை செய்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.