< Back
தேசிய செய்திகள்
Are there special facilities for actor Darshan inside the jail? - A shock scene that spreads wildly
தேசிய செய்திகள்

நடிகர் தர்ஷனுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகளா? - தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி

தினத்தந்தி
|
26 Aug 2024 10:17 AM IST

நடிகர் தர்ஷன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகர் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சிறைக்குள் 3 பேருடன், ஒரு கையில் சிகரெட்டையும் மறு கையில் ஒரு கோப்பையையும் தர்ஷன் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படம் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது. யார் எடுத்து வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரியாத நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த ஐஜி தலைமையிலான விசாரணை குழுவை சிறைத்துறை டிஐஜி அறிவித்துள்ளார்.

இந்த குழுவினர் சிறையில் சிசிடிவிகள் மற்றும் இந்த புகைப்படங்களில் உள்ள கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்