< Back
தேசிய செய்திகள்
சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
தேசிய செய்திகள்

சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

தினத்தந்தி
|
19 Aug 2022 9:11 PM IST

சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

பெங்களூரு:

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ராய்ச்சூர் மாவட்டம் தெலுங்கானாவுக்கு சேர வேண்டும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பேசி இருப்பது சரியல்ல. அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவை இல்லை. கர்நாடகத்தில் நிலம், நீர், மொழி, கலாசாரத்தை பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை. அந்த பாதுகாப்பை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.


குடகு மாவட்டத்தில் சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த சம்பவம் துரதிஷ்டமானது. ஜனநாயகத்தில் அனைவரும் அமைதி வழியில் போராட உரிமை உண்டு. ஆனால் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால் யாராக இருந்தாலும் நாங்கள் விட மாட்டோம்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

மேலும் செய்திகள்