< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக வி.எம்.வேலுமணி நியமனம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
தேசிய செய்திகள்

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக வி.எம்.வேலுமணி நியமனம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

தினத்தந்தி
|
4 May 2023 10:15 PM GMT

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக வி.எம்.வேலுமணி கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நியமிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக வி.எம்.வேலுமணி கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நியமிக்கப்பட்டார். அவரை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி முன்மொழிந்தது. அதை மறுபரிசீலனை செய்ய நீதிபதி வி.எம்.வேலுமணி விடுத்த கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்துடன், கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றும் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் ஒதுக்கியுள்ள அரசு குடியிருப்பை வைத்துக்கொள்ளும் வகையில், கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு பதிலாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மணிப்பூர் அல்லது திரிபுரா ஐகோர்ட்டுக்கு மாற்றுமாறும் நீதிபதி வி.எம்.வேலுமணி கொலீஜியத்துக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிப்பதற்கு நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கொலீஜியம், கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றும் முடிவையும், மணிப்பூர் அல்லது திரிபுரா ஐகோர்ட்டுக்கு மாற்ற கோருவதையும் மறுபரிசீலனை செய்ய ஏற்புடைய காரணம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்