< Back
தேசிய செய்திகள்
கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
தேசிய செய்திகள்

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

தினத்தந்தி
|
25 Jan 2024 11:53 AM IST

நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் கடந்த 19-ந்தேதி நடந்தது. இதில் நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த டிசம்பர் 25-ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, காலியாகி இருக்கும் அந்த இடத்துக்கு நீதிபதியை நியமிப்பது குறித்து கொலிஜியம் பரிசீலித்தது.

இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



மேலும் செய்திகள்