< Back
தேசிய செய்திகள்

கோப்புப்படம்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்

10 Sept 2024 11:04 PM IST
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குழுவின் பொறுப்பாளர்களை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதன்படி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு செயலாளர்களாக ரன்ஜீத் ரஞ்சன் (மாநிலங்களவை), எம்.கே.ராகவன் (மக்களவை), அமர் சிங் (லோக்சபா) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு பொருளாளராக கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.