மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - வெளியானது அறிவிப்பு
|மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31ம் தேதி வரை http://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.http://tndce.in இணையதளத்தில் மாதிரி படிவம்,விண்ணப்பித்தலுக்கான தகுதியை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் & ஆதாரில் உள்ளது போல் பதிவிட வேண்டும் என்றும், பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் https://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது
CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என்று 3 ஆண்டுகளுக்கு ரூ.30,000, முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 என்று 2 ஆண்டுகளுக்கு ரூ.40,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை htps://www.tndce.இந்த இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.