டி.ஆர்.டி.ஓ. தொழில் நுட்ப பிரிவில் 1901 காலி பணியிடங்கள் ;ரூ.63 ஆயிரம் வரை சம்பளம்- விண்ணப்பங்கள் வரவேற்பு
|டி.ஆர்.டி.ஓ. எனப்படும் மத்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் தொழில் நுட்ப பிரிவில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுடெல்லி,
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் மத்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் தொழில் நுட்ப பிரிவில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பி மற்றும் அசிஸ்டெண்ட் ஏ ஆகிய பதவிகள் நிரப்பப்படுகின்றன.
இதன்படி 1,901 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் செய்வதற்கான தொடக்க நாள் செப்டம்பர் 3.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 23.
கல்வி தகுதி
இந்த பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பி.எஸ்சி. பட்டம் அல்லது என்ஜினீயரிங் அல்லது தொழில் நுட்ப படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
விண்ணப்பிப்பவர்களின் வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விதிகளின்படி தளர்வுகள் வழங்கப்படும்.
சம்பளம்
இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் கிடைக்கும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு