< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ்: அதிகாலை 3 மணிக்கே குவிந்த இளைஞர்கள்!
தேசிய செய்திகள்

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ்: அதிகாலை 3 மணிக்கே குவிந்த இளைஞர்கள்!

தினத்தந்தி
|
22 Sept 2023 11:59 AM IST

டெல்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள இரண்டு ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

புதுடெல்லி,

ஐபோன் 15 சீரிஸ் போன்கள் இந்தியா உட்பட உலக நாடுகளில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதற்கான பணிகளை கவனித்து வருகிறது. ஐபோன் 15 சீரிஸ் போன்களை வாங்க அதிகாலை 3 மணி முதல் ஆப்பிள் சாதன ஆர்வலர்கள், டெல்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள இரண்டு ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

டெல்லியில் காலை 8 மணி அளவில் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது. அந்த ஸ்டோரில் உள்ள ஊழியர்கள் பகுதி பகுதியாக வாடிக்கையாளர்களிடம் போனை விற்பனை செய்து வருகின்றனர். டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் ஸ்டோர் நிறுவப்பட்ட பிறகு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஐபோன் சீரிஸாக ஐபோன் 15 அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 15, ஐபோன் 15+, ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை ஐபோன் 15 சீரிஸில் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதன் முன்பதிவு தொடங்கியது. டெல்லியில் ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ள மாலுக்கு வெளியில் நீண்ட வரிசையில் நின்று ஆப்பிள் ஐபோன் 15 போன்களை ஆர்வலர்கள் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்