< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி - கொல்கத்தா இடையிலான போட்டியை நேரில் கண்டுகளித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக்!
|20 April 2023 10:14 PM IST
ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதிவரும் போட்டியை நேரில் கண்டுகளித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ) டிம் குக் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையத்தை, டெல்லியில் இன்று டிம் குக் தொடங்கி வைத்தார். இதனிடையே இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவரும் ஐபிஎல் ஆட்டத்தை காண குக், டெல்லி மைதானத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் ரசிகர்களுடன் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு களித்தார்.