< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் விரைவில் மேல்முறையீடு-காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் விரைவில் மேல்முறையீடு-காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

தினத்தந்தி
|
1 April 2023 8:02 AM IST

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு சமீபத்தில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், ராகுல் காந்தியின் தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

இதற்காக சூரத் கோர்ட்டின் 168 பக்க தீர்ப்பு முழுமையாக மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை மூத்த சட்ட நிபுணர்களை கொண்டு தீவிரமாக ஆய்வு செய்து வரும் காங்கிரஸ் கட்சி, அதன் அடிப்படையில் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த விவகாரத்தில் ஓரிரு தினங்களில் மேல்முறையீடு செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது

மேலும் செய்திகள்