பவன் கல்யாணால் பெயரை மாற்றிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்...எதற்காக தெரியுமா?
|ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் அபார வெற்றி பெற்று, தற்போது அம்மாநில துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.
அமராவதி,
ஆந்திரத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் அபார வெற்றி பெற்று, தற்போது அம்மாநில துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதனால், பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் தனது பெயரை அதிகாரபூர்வமாக ' முத்ரகடா பத்மநாப ரெட்டி' என மாற்றிக் கொண்டுள்ளார்.
முன்னதாக தேர்தல் பிரசரத்தின் போது, பவன் கல்யாண் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது பெயரை முத்ரகடா பத்மநாபம் என்பதற்கு பதிலாக முத்ரகடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பத்மநாப ரெட்டி கூறுகையில், " எனது பெயரை மாற்றும்படி யாரும் என்னை வற்புறுத்தவில்லை. எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் அதை மாற்றினேன். இருப்பினும், ஜனசேனை தலைவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பினர்" என்றார்.