< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்
தேசிய செய்திகள்

காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்

தினத்தந்தி
|
19 Aug 2022 6:26 AM GMT

காஷ்மீரில் வசிக்கும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் இதர தேர்தலில் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் ஜம்மு-காஷ்மீரில் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் யாராயினும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் யாராயினும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ந்த்துக்கொள்ளலாம் எனவும் அதற்கு ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர் என்ற சான்றிதழ் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசிக்கும் பாதுகாப்பு படையினர், வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற முடியும்.

இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் தேர்தல் ஆணையர் கூறுகையில், ஊழியர், மாணவர், தொழிலாளர் அல்லது ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களாக வசிக்கும் வெளிமாநிலத்தை சேர்ந்த யாராயினும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்