பயங்கரவாத தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் கொலை - அனுபம் கேர் கடும் கண்டனம்
|காஷிமீரில் பயங்கரவாத தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கேர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில், நடப்பு ஆண்டில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருந்த காஷ்மீரி பண்டிட்டுகள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, சமீப நாட்களாக பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் நாட்டில் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் நேற்று நடந்து முடிந்த நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் இன்று தெரிவித்து உள்ளனர்.இந்த தாக்குதலில் அவரது சகோதரர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த நபர் சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரது சகோதரர் பிந்து குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்தார், காஷ்மீரி பண்டிட்டுகள் மீதான அட்டூழியங்கள் தொடர்கின்றன.
புதுடெல்லி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு மூத்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "காஷ்மீரி பண்டிட்கள் மீதான அட்டூழியங்கள் இன்றும் தொடர்வது வெட்கக்கேடானது. பயங்கரவாதிகள் தங்கள் சொந்த மக்களைக் கூட கொன்றுவிடுகிறார்கள். இந்தியாவுடன் நிற்கும் அனைவரையும் அவர்கள் கொன்றுவிடுகிறார்கள். இது கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டிக்கிறீர்களோ, அவ்வளவு குறையும். இந்த தீவிரவாத மனநிலையை நாம் மாற்ற வேண்டும்" என்று நடிகர் அனுபம் கேர் தெரிவித்தார்.