< Back
தேசிய செய்திகள்
பீகார்: அரசு பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
தேசிய செய்திகள்

பீகார்: அரசு பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தினத்தந்தி
|
27 Aug 2022 5:14 PM IST

பீகாரில் அரசு பொறியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கில் பணம் ,நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாட்னா,

பீகாரில் ஊரக வளர்ச்சித்துறையில் பொறியாளராக பணியாற்றி வருபவர் சஞ்சய் குமார் ராய். இவரது அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள் மற்றும் காசாளர் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து, சஞ்சய் குமார் ராய் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம் , நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் சிக்கிய பணத்தை எண்ணி வருகின்றனர்.

தங்க நகைகளை எடைபோட்டு மதிப்பிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சஞ்சய் குமார் ராய் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பீகாரில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் ரெய்டில் ரூ.4 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்